தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகறஇது. இதன் காரணமாக,
05.04.2023 மற்றும் 06.04.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.04.2023 முதல் 09.04.2023 வரை: தென் தமிழக மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை
ஏறத்தாழ 9 கோடி புத்தகம் கொண்ட இலவச ஆன்லைன் புத்தக களஞ்சியம்!
விதையில்லா நாற்றங்கால் அமைப்பது எப்படி? மானியம் கிடைக்குமா?
தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை
வட உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகள்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆயிக்குடி (தென்காசி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 5, மானாமதுரை (சிவகங்கை) 4, நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பொன்னணியாறு அணை (திருச்சி), தேக்கடி (தேனி), சாத்தூர் (விருதுநகர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), ஏற்காடு (சேலம்) தலா 3, க்ளென்மார்கன் (நீலகிரி), திண்டுக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), மூலனூர் (திருப்பூர்), வம்பன் Agro (புதுக்கோட்டை), தலா 2, மீமிதல் (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), தனிமங்கலம் (மதுரை), நகுடி (புதுக்கோட்டை), கோடைக்கானல் (திண்டுக்கல்), நடுவட்டம் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கோவில்பட்டி (திருச்சி), தென்காசி, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி), தேவகோட்டை (சிவகங்கை), அமராவதி அணை (திருப்பூர்), கழுகுமலை (தூத்துக்குடி), மேலூர் (மதுரை) தலா 1.
மேலும் படிக்க:
ஏறத்தாழ 9 கோடி புத்தகம் கொண்ட இலவச ஆன்லைன் புத்தக களஞ்சியம்!