சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால், இதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
அனுபவம்
இன்றைய சேமிப்பு நாளையப் பாதுகாப்பு என்பது நம் முன்னோர்களின் அனுபவங்கள் அளித்த பாடம். இதனைக் கடைப்பிடித்தால், எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதுடன், டென்ஷன் இல்லாமல், நிம்மதியாக வாழ முடியும். இதனைக் கருத்தில்கொண்டே, மத்திய அரசு பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
பிரத்யேக சேமிப்புத் திட்டம்
இந்நிலையில் பெண்குழந்தைகளை வைத்திருப்போரின் நலனில் அக்கறை கொண்டுள்ளது மத்திய அரசின். அந்தக் குழந்தைகளின் கல்வி அல்லது திருமணத்திற்கு செலவிட ஏதுவாக செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு சுகன்ய சம்ரிதி யோஜனா என்பதாகும்.
வட்டி அதிகரிப்பு
இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த வட்டி வீதத்தை 7.6 சதவீதத்தில் இருந்த 8 சதவீதமாக மாற்றி அமைத்திருக்கிறது மத்திய அரசு. இந்த வட்டி 2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்திற்கான வட்டியாகும்.
மகிழ்ச்சி
மத்திய அரசின் இந்த அறிவிப்பு, இந்தத்திட்டத்தில் முதலீடு செய்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கையை அவர்கள் மனதார வரவேற்றுள்ளனர்.
மேலும் படிக்க...
பெண்களுக்கு ரூ. 6000 வழங்கும் மத்திய அரசு!
சுட்டெரிக்கும் சூரியன்-கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கும் வழிகள்!