News

Thursday, 06 June 2019 04:18 PM

விவசாகிகளின் நிரந்தர வருமானம் என்பதினை முன்னெடுத்து மேலும் 8 லட்சம் விவசாகிகள்  பயன் பெறும் வாயில் மீண்டும் ஒரு திட்டத்தினை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. அதன் படி PM - Kisan திட்டத்தின் கீழ் பெரும் நிலம் வைத்திருப்பவர்களும் பயனடைவர்கள் என அறிவித்துள்ளது.  

25 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தினால் பலனடைவார்கள். நம் நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 0.6% பேர் மட்டுமே அதிக அளவிலான நிலம் வைத்திருப்பவர்கள். குறிப்பாக வட மாநிலங்களான குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, பஞ்சாப்  ஆகியன ஆகும். தென் மாநிலமான  கர்நாடக இதில் அடங்கும்.     

 

25 ஏக்கர் நிலம்

சதவீதம்

 

ராஜஸ்தான்             

4.7%

மத்திய பிரதேசம்    

0.6%

பஞ்சாப்                       

5.3%

ஹரியானா              

2.5%

ஜார்கண்ட்

0.7%

 

குஜராத்                   

0.7%

கர்நாடக                       

0.6%

 

சட்டிஸ்கர்   

0.6%

மகாராஷ்டிரா           

0.4%

தமிழ் நாடு   

0.2%

ஆந்திரா   

0.2%

உத்திர பிரதேசம்  

0.1%

இம்மாநிலங்களை தொடர்ந்து தெலுங்கானா, அசாம், ஒடிசா, கேரளா, பீகார் , மேற்கு வங்கம்,  ஹிமாச்சல், உத்தராகண்ட், ஜம்மு ஆகியன வருகிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் இத்திட்டத்தினால் பயன் பெறுவார்கள். ரூ 6000 மூன்று தவணைகளாக கொடுக்கப்படும்.

 PM - Kisan  திட்டத்தினால் சிறு விவாசகிகள் முதல் தவணையாக ரூ 2000/ - பெற்று தற்போது இரண்டாம் தவணையினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 2 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும்  முதல் தவணையினை  விரைவில் பெற உள்ளனர். அதன் வரிசையில் தற்போது 25 ஏக்கர் மேல் நிலம் வைத்திருப்பவர்களும் பயன் பெறுவார்கள்.

விதி விலக்கு

  PM - Kisan திட்டத்தில் விவசாகிகள் அல்லது பிறர் பயன் பெற இயலாது. திட்ட வடிவில் பயன் பெற இயலாதவர்கள்

  • மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்
  • முன்னாள் அமைச்சர்கள்
  • முன்னாள் ராணுவ வீரர்கள்
  • மருத்துவர்கள்
  • வழக்கறிஞர்கள்
  • பொறியாளர்

   என அரசு பரிந்துரைத்துள்ளது. தற்போது மாநிலங்கள் உள்ள அரசு அதிகாரிகள் விவசாகிகளின்  பெயர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

Anitha Jegadeesan

Krishi Jagran

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)