News

Tuesday, 08 March 2022 06:41 PM , by: T. Vigneshwaran

PNB BANK

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குச் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் குறிப்பாகக் கடன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகவும் எளிய முறையில் கடன் அளிக்க உள்ளது.

PNB இன்ஸ்டா லோன்

PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட திட்டம் தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சுமார் 8 லட்சம் ரூபாய் தொகையைத் தனிநபர் கடன் வேண்டுபவர்களுக்கு அளிக்க உள்ளது. இந்தக் கடனை பெற வெறும் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும் என்பது தான் கூடுதல் சிறப்பு.

8 லட்சம் ரூபாய் கடன்

பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தச் சிறப்பு வாய்ந்த PNB இன்ஸ்டா லோன் குறித்துத் தனது டிவிட்டர் கணக்கிலும் தெரிவித்து இருந்தது. இந்தக் கடனை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொபைல் செயலியான PNB One வாயிலாகப் பெறலாம் அல்லது 18001808888 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்தும் பெற முடியும்.

யாருக்கு லாபம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த 8 லட்சம் ரூபாய் எளிய கடனை மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் எளிதாகப் பெற முடிவது மட்டும் அல்லாமல் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாகக் கல்வி செலவுகள், திருமணச் செலவுகள், 2வது ஹனிமூன், வெளிநாட்டு சுற்றுலா, கார், பைக், நகைகள் வாங்குவதற்குக் கூடப் பயன்படுத்த முடியும்.

வாங்குவது எப்படி

நீங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த 8 லட்சம் ரூபாய் எளிய கடன் பெற விண்ணப்பிக்க விரும்பினால், இணைப்பைப் பின்தொடரவும், அதாவது https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#! இங்கே சென்று நேரடியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

மேலும் படிக்க

NOKIA-வின் மிகவும் ஸ்டைலான ஃபிளிப் போன் 1500 ரூபாய்க்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)