News

Wednesday, 28 April 2021 08:29 PM , by: Elavarse Sivakumar

ஈஷா யோகா மையம் சார்பில், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படும் எட்டு பள்ளிகள், கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்துவதற்காக, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கொரோனாப் பரவல் (Corona spread)

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக டெல்லி,பீகார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்க போதுமான அளவு ஆக்ஸிஜன் இல்லாததால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள் (Vaccination)

தமிழகத்திலும் நிலைமை கட்டுக்குள் இல்லை. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் தடுப்பூசிப் போடும் பணிகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈஷா வித்யா பள்ளிகள் (Isha Vidhya Schools)

இதனிடையே ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், வெளியிட்டுள்ள தன், 'டுவிட்டர்' பதிவில், ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, தமிழக அரசுக்கு ஒப்படைக்கிறோம். 'இந்த சவாலில் இருந்து வெளிவர, நம் சமூகம் ஒன்றிணைந்து, அரசு நிர்வாகத்தின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

8 பள்ளிகள் ஒப்படைப்பு (8 schools handed over)

இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், துாத்துக்குடி, விழுப்புரம், கடலுார், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகள், அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரூ.11.54 கோடி  (Rs.11.54 crore)

கடந்தாண்டு கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, சத்குரு, தன் பங்களிப்பாக, 11.54 கோடி ரூபாய் வழங்கினார். இந்நிதி, அவரது ஓவியங்களை ஆன்லைனில் (Online)விற்பனை செய்ததன் மூலம் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)