பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 30 March, 2021 6:38 AM IST

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு 

கடந்த 24 மணி நேரத்தில், 68,020 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.5 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிக பட்சமாக தினசரி கொவிட் பாதிப்பு 40,414 ஆக உள்ளது. நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,21,808 ஆக உள்ளது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

72வது நாளான நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993-து எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 291 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

3வது நாளாக 2000 பேர் பாதிப்பு 

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மூன்றாம் நாளாக கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,81,752ஆக உயர்ந்துள்ளது. 

அதிகபட்சமாகச் சென்னையில் 815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து கோவையில் 211 பேருக்கும் செங்கல்பட்டில் 202 பேருக்கும் தஞ்சையில் 130 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

English Summary: 8 States Including Tamil Nadu report high Daily New Cases, Vaccination Coverage has crossed 6 cr across the country
Published on: 30 March 2021, 06:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now