மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை 81.20% தமிழக மக்கள் ஆதரிப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் , உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 130 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
81% தமிழக மக்கள் ஆரதவு
இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தமிழக மக்களின் மனநிலை குறித்து தணியார் தொலைகாட்சி கருத்து கணிப்பை நடத்தியது, இதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை 81.20% பேர் ஆதரிப்பதாகவும், 8.24% பேர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பாக கருத்து சொல்ல முடியாது என்று 6.61 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 3.95 சதவீதம் பேர் வேறு ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர்.