News

Thursday, 21 October 2021 11:01 AM , by: Aruljothe Alagar

90 year old grandmother, 22 year old girl as panchayat leaders! Responsive!

நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றிய தேர்தல்களின் முடிவுகள் தமிழகம் முழுவதும் சாதாரண பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றும் தற்போது அனைவரையும் ஆச்சரிய படுத்தும் விதமாக நெல்லை மாவட்டத்தில் 90 வயது உடைய மூதாட்டி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி பட்டதாரி வாலிபர், 22 வயது இளம்பெண் பொறியாளர் ஊராட்சி தலைவர்களாக நேற்று பொறுப்பேற்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு  உட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி தலைவியாக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுபோல கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம் பட்டி ஊராட்சி தலைவியாக இன்ஜியரிங் பட்டதாரியான  22 வயது இளம்பெண் சாருலதா மற்றும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேலப்புத்தனேரி ஊராட்சி தலைவராக பட்டதாரி வாலிபர் மனோஜ்குமார் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று ஊராட்சி தலைவர்களாக சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். பெருமாத்தாளுக்கு வருவாய் ஆய்வாளர் வானமாமலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதற்கான கோப்பில் பெருமாத்தாள் கையெழுத்திட்டார்.

மேலும் படிக்க...

தமிழக்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)