தமிழகத்தில் 97.5 சதவீத நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தத் திட்டங்களை அடுத்தடுத்து அமல்படுத்தும் நடவடிக்கைகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக, திமுக அரசின் கனவுத் திட்டமாகக் கருதப்பட்ட நகைக்கடன் தள்ளுபடித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் ரூ.5200 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டு 97.5 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தன. பின்னர், கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ரூ.5200 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டு 97.5 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், 12.19 லட்சம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சரின் அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!
லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!