மதுரை என்றாலே உள்ளூர் வாசிகளுக்கும் வெளியூர் வாசிகளுக்கும் நினைவுக்கு வரும் முக்கியமான விஷயங்கள் என்றால் மீனாட்சி அம்மன் கோயில், மல்லிகை பூ, சித்திரை திருவிழா, ஜிகர்தண்டா.. இது தவிர பரோட்டா, கறி தோசை, கொத்து கறி என மதுரையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவும், ஒவ்வொரு உணவகமும் ஃபேமஸ் தான்.
தமிழகத்தின் கலாச்சார தலைநகரமான மதுரையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல தலைமுறைகளாக நடத்தப்பட்டு வரும் கடைகளும், தற்போதைய காலத்தில் தொடங்கப்பட்ட கடைகளும் அடங்கும்.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை கே.கே.நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட உணவகம் தான் இந்த முக்கு கடை கே.சுப்பு மூங்கில் தோட்டம் உணவகம். முழுக்க முழுக்க சுவர்கள் எதுவும் இல்லாமல் மூங்கில் கம்புகள் மற்றும் தென்னை கூரைகளை கொண்டு இயக்கையான சூழலில் இந்த உணவகமானது அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்ட இந்த உணவகம் பின்னர் நாளடைவில் அதே மதுரை மக்களின் வரவேற்பை பெற்று தற்போது, தினமும் மாலை நேரங்களில் "ஹவுஸ் ஃபுல்" ஆக இயங்கி வருகிறது. தினமும் சராசரியாக 500 முதல் 1,000 வாடிக்கையாளர்கள் வந்து செல்வதாகவும் , வார இறுதி நாட்களிலும் பிற விடுமுறை நாட்களிலும் 1,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் குடும்பமாக வந்து உணவருந்திவிட்டு செல்வதாகவும் இந்த கடையில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கடையின் உரிமையாளரிடம் பேசிய போது , தனது தாத்தாவால் மதுரா கோட்ஸ் பகுதியில் இட்லி கடையாக திறக்கப்பட்டு அந்த முயற்சியின் பலனாக இன்று இந்த கடை அமைந்ததாகவும்.இந்த உணவகத்தை தொடங்குவதற்கு முன்பு எதேனும் தனித்துவமாக செய்யவேண்டும் என்ற நோக்கில் கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டதாகவும் அங்கு இவ்வாறு மூங்கிலகளால் கட்டப்பட்டு பல கடைகள் இயங்கி வந்ததாகவும் மதுரை அவ்வாறு ஒரு கடை இல்லாத நிலையில் இந்த முடிவெடுத்து மூங்கில் கடை ஆரம்பிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் படிக்க:
சோலார் பம்புகளை நிறுவ விவசாயிகள் 60% மானியம்
ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்