கோவை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விநியோகம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது, முதல் கட்டம் 24 ஜூலை 2023 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது இரண்டு கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக 24,07.2023 முதல் 04.08.2023 முடிய நடைபெற்று வருகிறது. இதில் பொது மக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்து வருகிறார்கள்.
எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வரும் 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. எனவே பொது மக்கள் தங்களது விண்ணப்பங்களை மேற்படி 03.08.2023 மற்றும் 04.08.2023 தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்திடுமாறும், விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாய விலைக்கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்திடுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே பொது மக்கள் தங்களது விண்ணப்பங்களை மேற்படி 03.08.2023 மற்றும் 04.08.2023 தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்யும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க:
PM Yasasvi திட்டத்தின் கீழ் மாணவர்கள் ரூ.1.25 லட்சம் வரை உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
விரைவில் 1.25 லட்சம் PM Kisan Samriddhi Kendras: விவசாய பிரச்சனைக்கு தீர்வு காணும் மையம்