கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரண்டு பெண்களையும் காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி சிக்னலாக பதனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியை காட்டியது.
அவர்களின் செல்போன் எண்ணிற்கு கடைசியாக போலி மந்திரவாதியான முகம்மது ஷபி என்பவர் பேசியிருப்பதும் தெரியவந்தது. உடனே முகமது ஷபியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, 2 பெண்களையும் நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட 2 பெண்களில் பத்மா என்ற பெண் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், லாட்டரி தொழிலுக்காக அவர் கேரளா சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. 2 பெண்களையும் முகமது ஷாஃபி, சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தம்பதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து, சுத்தியால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து இருவரின் சடலங்களையும் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி சாப்பிட்டுள்ளனர். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார். பின்னர் இரு பெண்களின் ரகசிய இடத்திலும் கத்தியால் கீறி அந்த ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளத்தையும் கதிகலங்க செய்கிறது. பண ஆசைக்காக இரு பெண்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: