பீகாரின் ருடாவால் நகரில் உள்ள நிம்பஹேரா கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஹரிராம் சர்மா சமூக வலைத்தளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேசுப்பொருளாகி உள்ளார். இதற்கு காரணம், அவர் விளைவித்து வரும் முள்ளங்கி தான். மற்ற விவசாயிகளின் பார்வை ஹரிராம் பக்கம் திரும்பியுள்ளதற்கான காரணத்தை இங்கே காணலாம்.
விவசாயி ஹரிராம் சர்மா, தனது வயலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் முள்ளங்கி பயிரிட்டுள்ளார். இந்த முள்ளங்கி காயானது அவற்றின் வழக்கத்திற்கு மாறான அளவு மற்றும் வடிவம் கொண்டுள்ள காரணத்தினால் தற்போது பேசுப்பொருளாகி உள்ளது.
ஒவ்வொரு முள்ளங்கியும் 11 முதல் 15 கிலோகிராம் வரை எடையுள்ளது. இந்த முள்ளங்கியினை காண அண்டை பகுதிகளில் இருந்து பல விவசாயிகள் ஹரிராம் பண்ணைக்கு தொடர்ச்சியாக படையெடுத்து வருகின்றனர்.
இதுக்குறித்து விவசாயி ஹரிராம் தெரிவிக்கையில், “பொதுவாக, முள்ளங்கி காய் ஒன்று 40 முதல் 45 கிராம் வரை எடையுடன் இருக்கும். ஆனால் தனது வயலில் விளைந்த முள்ளங்கிகள் குறிப்பிடத்தக்க வகையில் கனமாகவும் பெரியதாகவும் இருக்கிறது. தோராயமாக அவை 11 முதல் 15 கிலோகிராம் வரை எடையும், 2 முதல் 3 அடி அளவு உயரத்துடனும் இருக்கிறது. இந்த முள்ளங்கி தற்போது கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
ஹரிராம் சர்மா தனது வயலில் நடவு செய்ய கலப்பின முள்ளங்கி விதைகளைப் பயன்படுத்தி வருகிறார். முள்ளங்கிகள் மிகவும் கனமானவை மற்றும் அவற்றை வேரோடு பிடுங்க இரண்டு பேர் தேவை.
விவசாயி ஹரிராம் ஷர்மா மேலும் கூறுகையில், ”முள்ளங்கி தனித்த தோற்றம் மற்றும் சுவையுடன் இருக்கும். பராத்தா மற்றும் சாலட் செய்வதற்கு இது சரியானது. தொடர்ந்து நல்ல பயிர்களை விளைவிப்பதற்காக அப்பகுதியில் உள்ள வளமான மண்ணும் ஒருவிதமான காரணம்” என்றார்.
கடந்த ஆண்டு, பாரம்பரிய விவசாயியான கியான்தேவ் நெட்கே தனது இரண்டரை ஏக்கர் வயலில் வேர்க்கடலையுடன் முள்ளங்கியை நட்டு புதிய அணுகுமுறையை மேற்கொண்டார். முடிவுகள் சிறப்பாக இருந்தன. முள்ளங்கியின் ஒரு சிறிய பகுதி குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக விளைந்தது, ஒரு முள்ளங்கி ஐந்து கிலோகிராம்களுக்கு மேல் எடை கொண்டது. கியான்தேவின் புதுமையான விவசாய முறைகள் பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. முள்ளங்கிகள் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் குளிர்ந்த பருவங்களில் வளரும். அவை குளிர்காலத்தில் லேசான உறைபனியைக் கையாளும் தன்மைக் கொண்டது.
வடக்கு சமவெளிகளில், முள்ளங்கியை செப்டம்பர் முதல் ஜனவரி வரை எப்போது வேண்டுமானாலும் நடலாம். மலைகளில், பொதுவாக மார்ச் முதல் ஆகஸ்ட் வரை நன்கு வளரும். ஒரு ஹெக்டேருக்கு முள்ளங்கி மகசூல் ஆண்டுதோறும் பயிரிடப்படும் பயிர்களின் வகை மற்றும் அதிர்வெண் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும். பொதுவாக, விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 10,000 முதல் 15,000 கிலோகிராம் முள்ளங்கிகளை அறுவடை செய்ய இயலும்.
Read more:
மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை!