தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்ககடலில், பூமத்தியரேகை ஒட்டி இந்திய பெருங்கடல் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாம மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 2-ம தேதி தமிழகத்தை நோக்கி வரக்கூடும்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 30-ம் தேதி தென்தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு
டிசம்பர் 1-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் , ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய புரெவி (Burevi cyclone) என பெயர் வைக்கப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
நவம்பர் 29
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகாத்தில் வீசக்கூடும்.
நவம்பர் 30
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகாத்தில் வீசும்.
டிசம்பர் 1
தென்மேற்கு வங்கக் கடல், ஆந்திராப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகாத்தில் வீசும்.
டிசம்பர் 2
தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மாலத்தீவு மற்றும் லச்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகாத்தில் வீசும், இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க...
நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!