பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 January, 2023 12:08 PM IST
Electricity meter - extra charges

மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் அதை பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார விதியில் திருத்தம்

வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வழங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களையும், மின்சாரம் தயாரிப்பதற்கு நிலக்கரி வாங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவினங்களை சரி கட்டவும் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மாதந்தோறும் வசூலிக்க முடியாத சூழல் ஏற்படுமானால் ஆண்டுக்கு ஒரு முறை என்று கணக்கிட்டு அதை நுகர்வோரிடம் மின் வாரியம் வசூலிக்கவும் விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மின்கட்டணம் அதிகமாக உள்ளது என்று மக்கள் புலம்பும் நேரத்தில் மின் வாரியத்தின் கூடுதல் செலவுகளையும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று இப்போது கூறப்பட்டு உள்ளதால் மக்களுக்கு இது மேலும் அதிக சுமையாக அமையும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மின்வாரிய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டதற்கு மின்சார திருத்த விதிகளில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது உண்மை தான். கூடுதல் செலவுகளை மக்களிடம் இருந்து பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தாலும் அது கட்டாயம் கிடையாது.

மின்வாரிய தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மின்சார வினியோகத்தை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியாரிடம் கொடுக்க விரைவில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

அவ்வாறு தனியாரிடம் செல்லும் போது அவர்கள் செலவினங்களை வசூலிப்பதற்கு ஏற்ப இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மாதந்தோறும் செலவினங்களை வசூலிப்பதை இப்போது நடைமுறைப்படுத்தாவிட்டாலும் விரைவில் இது அமல்படுத்தப்படும் என்றே தெரிகிறது.

மேலும் படிக்க

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி: இனி இந்தக் கவலையே இல்லை!

50,000 ரூபாய் இருந்தால் போதும்: ஈசியா இந்த தொழில் செய்யலாம்!

English Summary: A new electricity bill every month? Effective soon!
Published on: 21 January 2023, 12:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now