News

Friday, 05 August 2022 11:25 AM , by: Elavarse Sivakumar

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆகஸ்ட் 7ம் தேதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

அந்த வகையில் இன்றும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது. பின்னர், ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை குறையும்

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 தினங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மிக கனமழை

அதேநேரத்தில் ,வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)