இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சீனாவில் கொரோனா பரவல் தொடங்கிவிட்டது. மே மாதத்தில் இருந்து பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியது. கெரோனா பரவலின் தீவிரத்தால் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சீனாவின் முக்கிய நகரங்களில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டது.
சீனாவில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதால் அண்டை நாடுகள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன் எதிரொலியாக இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன ஆலோசனை நடத்தினார்.
சீனாவைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதுச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவில் வேகமாக பரவும் BF.7 வகை கொரேனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 3 பேருக்கு இந்த வகை கொரேனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கு புதிய வகை கொரோன கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதுவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: