தஞ்சாவூரில் இருந்து வெட்டிக்காடு வழியாக சில்லத்தூருக்கு ஒரு அரசு பஸ்சும், தஞ்சாவூரில் இருந்து வெட்டிக்காடுக்கு மற்றொரு அரசு பஸ்சும் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர்-வெட்டிக்காடு வரையிலான 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இந்த பஸ்களில் தான் சென்று வருகின்றனர்.
பேருந்துகள் பழுது (Repair of buses)
இந்த பஸ்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன. குறிப்பாக பஸ்சின் மேற் கூரைகள் சேதமடைந்து உள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் பஸ்சிற்குள் விழுகிறது. அதேபோல நேற்று முன்தினம் இப்பகுதியில் மழை பெய்தபோது பஸ்சிற்குள் மழைநீர் விழுந்தது. இதனால், அதில் பயணம் செய்த பயணி ஒருவர் குடைபிடித்தபடி சென்றார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. பயணிகள் கோரிக்கை கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆகவே, பழுதடைந்த இந்த பஸ்களை மாற்றிவிட்டு புதிய பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி: புதுவித தீர்வுடன் விற்பனையாளர்கள்!