மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 July, 2021 8:02 PM IST
Credit : Dinamalar

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் வைரஸ் தாக்கத்திற்கு பல்வேறு விதமான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பு மருந்து

சக்தி வாய்ந்த தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகின்றன. கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் ஆபத்தான டெல்டா ரகம் முதல் பல ரகங்களுக்குத் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஓர் பாதுகாப்பான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

தங்களது இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர். புரோட்டோ ரிசர்ச் என்கிற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸின் 27 ரகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சாம்பிள்கள் இதற்காக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது. புரதத்தை (Protein) கொண்டு வைரஸை அழிக்கும் புதிய மருந்து கலவையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன் பெயர் வைரல் புரோட்டின். இதன் முப்பரிணாமத்தையும் ஆராய்ந்துள்ளனர். இதற்காக பிரத்தியோகமாக கணினி அல்காரிதம் (Computer Algorithm) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஆர்என்ஏ பைண்டிங் செயல்பாடு நடைபெற்றது. இந்த ஆய்வு கலவைக்கு அனுமதி கிடைத்தால் இதன்மூலம் சர்வ வல்லமை பொருந்திய புதியதடுப்பு மருந்தை உருவாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

குளிர்காலத்தில் கொரனாவின் புதிய ரகம்: பிரஞ்சு விஞ்ஞானி தகவல்

மாநிலங்களின் கையிருப்பில் 3.09 கோடி தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்!

English Summary: A vaccine capable of dealing with 27 type coronas!
Published on: 27 July 2021, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now