1,அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாட்கோ திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
சென்னை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் கூட்ட அரங்கத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாட்கோ திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தாட்கோ கட்டுமான பிரிவு துறையால் கட்டப்பட்டு வரும் பள்ளிகள், விடுதிகள், நவீன சமுதாயக் கூடங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், ஒன்றிய அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் செயற்பொறியாளர்களுக்கு அமைச்சர் வலியுறுத்தினார்.
2,பால் பாக்கெட் வாங்க ஆதார் கார்டு, குடும்ப அட்டை கட்டாயம்
ஆவின் மாதாந்திர பால் அட்டை பெற ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை நகல் கொடுக்கப்படவில்லை என்றால் ஆவின் பால் அட்டை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் மாதந்திர கட்டணம் செலுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி ஆதார் எண் , ரேசன் கார்டு அட்டை நகல் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆவின் பாலுக்கு மாதந்திரம் கட்டணம் செலுத்தி அட்டை மூலம் பால் பாக்கெட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் பால் பாக்கெட் விற்பனை செய்து வருகிறது ஆவின் பால் நிறுவனம் . ஆவின் பால் அட்டை பெற்று பால் பெறும் வாடிக்கையாளர்கள் மார்ச் 23 மாதாந்திர பால் அட்டை பெற ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் வழங்கி பெற்றுக்கொள்ளவும்.
3,சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, கரும்புச்சக்கையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் 2010 ஆம் ஆண்டு திமுகவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட நிலையில், அதிமுகவின் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இத்திட்ட பணிகள் வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றார். நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
4,உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நேரடி கொள்முதல்!
உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடிக் கொள்முதல் செய்யவுள்ளது. பயறு விவசாயிகள் பயன்பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் வேண்டுகோள்.
5,ஹால்மார்க் அடையாளம் இல்லாத தங்க நகைகள் விற்பனை கிடையாது
ஹால்மார்க் அடையாளம் இல்லாத தங்க நகைகள் விற்பனை செய்ய மார்ச் 31க்குப் பிறகு அனுமதி கிடையாது என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள் நலன் கருதி ஏப்ரல் 1 முதல் hallmark முத்திரை பதித்த தங்கம் மட்டுமே அணைத்து இடங்களிலும் விற்பனை என மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
6,இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுப்பு
இனிவரும் மாதங்களில் கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிா்வாகக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது வெப்ப அலைகளையும் புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
7,10 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லி பயணத்தை தொடங்கியுள்ளனர்
2020ல் டெல்லி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, தமிழ்நாடு அணைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு’கன்னியாகுமரியில் இருந்து தில்லி பயணத்தை வியாழக்கிழமை தொடங்கியது. கமிட்டித் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ் குமார் கக்காஜி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்தேவ் சிங் ஆகியோர் முன்னிலையில் ம.தி.மு.க தலைமைச் செயலாளர் துரை வைகோ, காந்தி மண்டபத்தில் சாலைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அவர்களின் பத்து அம்ச கோரிக்கைகள், விவசாய உற்பத்திகளுக்கு லாபகரமான MSP வழங்குவதற்கான மசோதா, GM பயிர்களுக்கு தடை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்தல், மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சிகள், டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.
8,தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என்பது பொய் குற்றச்சாட்டு - சி.வெ.கணேசன் அறிக்கை
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைப்பெறுகிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிய நிலையில் , இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமின்றி எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
9,பூசா வேளாண் அறிவியல் கண்காட்சி இன்று நிறைவடைகிறது
ஒவ்வொரு ஆண்டும் வேளாண் அறிவியல் கண்காட்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் பூசா மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை தேசிய தலைநகரில் நடத்துகின்றன. இந்த ஆண்டுக்கான பூசா வேளாண் அறிவியல் கண்காட்சி 2023 மார்ச் 2 முதல் 4 வரை புது தில்லியில் உள்ள பூசா கண்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்று நாள் பூசா வேளாண் அறிவியல் கண்காட்சி 2023-ஐ மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் உயிர் உரங்கள் மற்றும் வேளாண் இரசாயனங்களின் செயல்விளக்கம் மற்றும் விற்பனை.. விவசாயிகளின் விளைபொருட்களின் காட்சி மற்றும் விற்பனை. வினைத்திறனான நீரைப் பயன்படுத்துவதற்கான நீர்ப்பாசன நுட்பங்கள் உட்பட பல விடயங்கள் பற்றிய விளக்கங்கள் மற்றும் தகவல்களுடன் கண்காட்சி இன்று நிறைவடையும்.
10,வானிலை தகவல்
தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மலை பெய்ய கூடும்,ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி குறைவாக இருக்கும். மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவுமில்லை.
மேலும் படிக்க
பால் பாக்கெட் வாங்க ஆதார் கார்டு, குடும்ப அட்டை கட்டாயம்
புதுப்பிக்கப்பட்ட தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியினை திறந்து வைத்த ஆட்சியர்