News

Sunday, 27 November 2022 07:02 AM , by: R. Balakrishnan

Aadhar - Electricity Link

தமிழக முழுவதும், 100 யூனிட் மின்சாரத்தை கட்டணம் இன்றி பெற விரும்புவோர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இதற்காக இணையதள லிங்கை வெளியிட்டுள்ளது.

ஆதார் - மின் இணைப்பு

தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள் மற்றும் கைத்தறி விசைத்தறி தொழிளார்கள் ஆகியோர் தங்கள் 100 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரத்தை தொடர்ந்து பெற ஆதாரை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது ஆதார் எண்ணை இணைக்க லிங்க் வெளியிடப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் ஆதார் கார்டு விபரங்களை இதன்மூலம் இணைத்து கொள்ளலாம். https://www.tnebltd.gov.in/adharupload/ இந்த லிங்க் ஆனது மின்சார வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அந்த வகையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங் ஒன்றை தமிழக மின்சார வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு, மின் மோசடிகள் தவிர்க்கப்படுவதுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச மின்சாரம் பெறும் பயனர்களை எளிதில் கண்டறிந்து அவற்றை தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொழிற்சாலை இணைப்புகளுக்கு கட்டாயம் இல்லை என்றாலும், 100 யூனிட் மின்சார மானியம் பயனர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்காவிட்டாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

உங்கள் வீடு தேடி வரும் ஆதார் சேவை: இனி அலைச்சலே இல்லை!

போலியான தகவல்களை நம்பாதீர்கள்: TNPSC முக்கிய அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)