News

Friday, 14 October 2022 07:56 AM , by: R. Balakrishnan

Free Electricity

தமிழகம் முழுவதும் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கும், 2.22 கோடி வீடுகளுக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 500 யூனிட் மின்சாரம் வரை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறது. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் வாடகை வீட்டில் தங்கிருக்கும் குடும்பங்களுக்கு வீட்டில் உரிமையாளர்கள் சிலர் ஒரு யூனிட்டுக்கு ரூ10 கட்டண உயர்த்தி வசூலித்து வருவதாகவும், ஒரு சிலர் தங்களது வீட்டிற்கு பல மின் இணைப்புகளை பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டு வருகிறது.

100 யூனிட் மின்சாரம்

ஒரு சில வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனியாக மீட்டர் இருப்பதால் ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிட் இலவச மின்காரம் மற்றும் 500 யூனிட்வரை மானியம் என அவர்களின் மின்கட்டணம் குறைந்து வருகிறது. இதனால் மின்வாரியத்தின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மின்கட்டண உயர்வுக்கு முன்னாள் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு தமிழக அரசு சார்பில், 3,650 கோடி மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்கட்டண உயர்வினால், இந்த மானிய கட்டம்ண 5572 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மின்சாரத்தில் முறைகேடு செய்வதை தவிர்க்கும் வகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டள்ளது. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதார் இணைப்பு

முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

ஆனால் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை. என்று அரசிதழலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

எச்சரிக்கை வேண்டும்: மின்சார கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு!

பென்சன் வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)