அனைவருமே ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டு - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பதற்கான கடைசி தேதி 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆதார் கார்டு - வாக்காளர் அட்டை (Aadhar -Voter Id Linking)
அனைவரும், வாக்காளர் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.
இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி தேதி 2024ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் அனைவரும் ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டை இணைக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தன. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் அனைவரும் ஆதார் கார்டு - வாக்காளர் அட்டை இணைக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வந்தது.
வாக்காளர் அட்டை - ஆதார் இணைக்கும் முறை
- https://www.nvsp.in/ இணையதளத்துக்கு செல்லவும்.
- அதில் Forms பிரிவை கிளிக் செய்யவும்.
- உள்ளே Login செய்து Form6B கிளிக் செய்யவும்.
- மாநிலம், தொகுதி ஆகியவற்றை தேர்வு செய்யவும்.
- ஆதார் எண், மொபைலுக்கு வரும் OTP உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்யவும்.
- Submit கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க
15 நாட்களில் புதிய ரேஷன் அட்டை: கலெக்டர் அதிரடி உத்தரவு!
நீதி கேட்டு தஞ்சாவூர் விவசாயிகள் நெடும் பயணம்: டெல்லியில் போராட்டம்!