News

Wednesday, 19 January 2022 08:41 PM , by: T. Vigneshwaran

Aadhar card is no longer valid, shocking news!

ஆதார் அட்டை  இந்திய குடிமக்கள் அனைவருக்குமான முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதுபோன்ற நிலையில் வெளிச் சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி அட்டைகள் (Aadhaar PVC card) செல்லாது என ஆதார் ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் ஆதார் பிவிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் கோரியுள்ளது. எனினும், ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர் நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளலாம்.

இது தொடர்பாக, ஆதார் ஆணையம், “வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் பிவிசி/பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் செல்லாது. வெளிச் சந்தை பிவிசி ஆதார் கார்டுகளை நாங்கள் ஊக்குவிப்பதுமில்லை என்றும், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதார் பிவிசி கார்டு அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளது.

பிவிசி ஆதார் கார்டு பெற விரும்புவோரு ஆதார் இணையதளத்துக்கு சென்று அதில் உள்ள 'Order Aadhaar PVC Card' பிரிவில் 12 இலக்க ஆதார் எண் பதிவிட்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம். 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஸ்பீடு போஸ்ட் வழியாக உங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும்.

மேலும் படிக்க

மக்களின் கணக்கில் ரூ.974 கோடி மாற்றப்படும், மோடி அரசின் பெரிய முடிவு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)