1.பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
பால் உற்பத்தியை அதிகரிக்க பால் பண்ணையாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்று தமிழகப் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஆவின் பால் பண்ணைகளின் பால் கையாளும் திறனை இந்த ஆண்டு இறுதிக்குள் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தியை அதிகரிக்க பால் பண்ணையாளர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்க நிர்வாக சீர்திருத்தங்கள் தேவை என்று தங்கராஜ் வலியுறுத்தி உல்ளார். இதையடுத்து, பால் கொள்முதல் மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருவதாக நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
2.மீனவர்களுக்கு ஜூன் மாதத்திற்குள் பயோமெட்ரிக் பதிவு
காரைக்கால் மீனவர்களுக்கு ஜூன் மாதத்திற்குள் பயோமெட்ரிக் பதிவு செய்து கடலில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும். மீன்பிடிக்கச் செல்பவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்குச் செல்லும்போதும் தங்களைப் பதிவு செய்யும்படி பயோமெட்ரிக் பதிவு முறை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியகையுள்ளது.
கடலில் அனுமதியின்றி மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில், காரைக்கால் நிர்வாகமும் மீன்வளத்துறையும் இணைந்து ஆண்டு மீன்பிடி தடைக்காலம் முடிவடையும் ஜூன் மாதத்திற்குள் மீனவர்களுக்குப் பயோமெட்ரிக் பதிவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
3.ரூ. 2000 நோட்டை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு
புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் ரூ. 2000 நோட்டுகள் செப். 30 வரை செல்லுபடியாகும். ரூ. 2000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு. கையிருப்பில் உள்ள ரூ. 2000 நோட்டுகளை மே 23-ம் தேதி முதல் செப். 30 வரை வங்கியில் டெபாசிட் செய்யலாம். வரும் செவ்வாய் முதல் வங்கிகளில் ரூ. 2000 நோட்டை கொடுத்து வேறு மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு ரூ. 20,000 வரை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது .
4.முட்டை விலை உயர்வு
சென்னையில் ஒரு முட்டையில் விற்பனை விலை 5 காசுகள் உயர்ந்து 5 ரூயாய் 25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லில் ஒருகிலோ கறிக்கோழி (உயிருடன்) கொள்முதல் விலை ரூ.122 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
5.இந்திய மீன் உற்பத்தியில் சாதனை
இந்தியாவின் மீன் உற்பத்தி 2021-22 ஆம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்திருப்பதாக, ஒன்றிய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். கோவாவில் நடைப்பெற்ற விழாவில் பேசிய அமைச்சர், உலகளவில் மீன் உற்பத்தியில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்து இந்திய மிகப்பெரிய மூன்றாவது மீன் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
உலகளவில் கவனத்தை பெற்ற இந்தியா- மீன் உற்பத்தியில் புதிய சாதனை
மீனவர்களுக்கு வர இருக்கும் பயோமெற்றிக் பதிவு-இனி எந்த பயமும் இல்லை!