News

Sunday, 18 September 2022 10:01 AM , by: Elavarse Sivakumar

அதிகாரிகளின் குளறுபடிகளால் வங்கிக்கணக்கில் திடீரென பணம் வருவது வாடிக்கையான சம்பவமாக மாறி வருகின்றன. ஆனால், அப்படி வந்தப் பணத்தை வைத்து லாபம் சம்பாதித்திருகிறார் இந்த கில்லாடி நபர்.

குஜராத்தை சேர்ந்த ஒருவரது டிமேட் கணக்கில், ரூ.11,677 கோடி தவறுதலாக வரவு செய்யப்பட்டு அன்று இரவே பணம் மீண்டும் எடுக்கப்பட்டுவிட்டது. இடைப்பட்ட நேரத்தில், ரூ.2 கோடியை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதில் ரூ.5 லட்சம் பார்த்துள்ளார் அந்த பலே கில்லாடி.

ஆமதாபாத்தை சேர்ந்தவர் ரமேஷ் சாகர். பங்குவர்த்தக்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவரது டிமேட் கணக்கில், கடந்த ஜூலை 26ம் தேதி, ரூ.11 ஆயிரத்து 677 கோடி வரவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை கண்டும் பதற்றப்படாமல், அந்த தொகையிலிருந்து ரூ.2 கோடியை பங்கு சந்தையில் உடனடியாக முதலீடு செய்திருக்கிறார்.

அதிலிருந்து அன்றைய நாளில், ரூ.5 லட்சம் லாபம் பார்த்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறாக பணம் வரவு செய்யப்பட்ட தகவலை தெரிவித்து, அன்றைய இரவு மீண்டும் பணத்தை வங்கி திரும்ப பெற்றுவிட்டது. இடைப்பட்ட 8 மணி நேரத்தில், ரமேஷ் சாகர் தனது புத்திசாலிதனத்தால் ரூ.5 லட்சம் சம்பாதித்திருக்கிறார்.

சமீபத்தில், அமெரிக்காவை சேர்ந்த ஒருவரது வங்கி கணக்கில், இப்படி தவறுதலாக ரூ.50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட, அவர், சில மணி நேரம், உலக பில்லியனர் பட்டியலில் 25வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

துப்புரவு பணியாளரை காதலித்து கரம் பிடித்த பெண் டாக்டர்!

ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)