கிரிஷி ஜாக்ரன் தலைமையகத்திலுள்ள KJ Chaupal-ல் நடைப்பெற்ற அமர்வில் இந்தியாவின் மிகப்பெரிய டிராக்டர் மற்றும் கட்டுமான உபகரண உற்பத்தி நிறுவனமான ACE-யின் (Action Construction Equipment Ltd) அசோக் அனந்தராமன் (C.O.O- ACE) சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வருகிறது கிரிஷி ஜாக்ரான். இந்நிலையில், கிரிஷி ஜாக்ரானின் KJ Chaupal-க்கு விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள், பன்முக ஆளுமைகள் என வேளாண் துறை சார்ந்து இயங்கும் பலரும் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர். அந்த வகையில், இன்றைய தினம் இந்தியாவின் மிகப்பெரிய டிராக்டர் மற்றும் கட்டுமான உபகரண உற்பத்தி நிறுவனமான ACE-யின் (Action Construction Equipment Ltd) அசோக் அனந்தராமன் (Chief operating officer -ACE) பங்கேற்று இந்திய வேளாண் துறையில் விவசாயிகள் பண்ணை இயந்திரமாக்கல் நோக்கி நகர வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.
MC டொமினிக் – வரவேற்புரை:
KJ Chaupal-ல் நடைப்பெற்ற அமர்வில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர்களான அசோக் அனந்தராமன் மற்றும் ராஜூவ் ரஞ்சன் (மூத்த மேலாளர்- PMG) ஆகியோரை கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் MC டொமினிக் வரவேற்று பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, அசோக் அனந்தராமன் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசத்தொடங்கினார். அவர் தனது உரையில், ACE நிறுவனத்தின் நீண்டகால பாரம்பரியத்தை பார்வையாளர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். கிரேன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், இந்தியா முழுவதும் புல்லட் ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் போன்ற நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ACE நிறுவனத்தின் பங்கு பற்றி விளக்கினார். உள்நாட்டு பாதுகாப்பு அங்கமாக விளங்கும் கடற்படை மற்றும் இராணுவம் உள்ளிட்ட துறைகளில் தொழில் நுட்ப இயந்திர தேவைகளையும் ACE நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாக குறிப்பிட்டார்.
இதுதான் இன்றைய சவால்- அசோக் அனந்த்ராமன்:
”விரைவான நகரமயமாக்கல் காரணமாக விளைநிலங்கள் படிப்படியாக குறைந்து வரும் சூழ்நிலையில், அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ற உணவுத்தேவையினையும் பூர்த்தி செய்ய வேண்டிய சவால் நம்முன் உள்ளது. இதற்கு விவசாய செயல்திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் ஒரு முக்கியமான தீர்வாக எதிர்க்காலத்தில் அமையும்” என தனது உரையில் அசோக் குறிப்பிட்டார்.
Read also: Tamilnadu weather: மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை!
இந்தியா வரலாற்று ரீதியாக பண்ணை இயந்திரமயமாக்கலில் பின்தங்கியுள்ளது என குறிப்பிட்ட அசோக் அனந்தராமன், இப்போது விவசாயிகள் மத்தியில் வணிகமயமாக்கல் நோக்கிய மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு பயிர்களுக்கு அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பணிபுரிவது அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
துல்லியமான விவசாயம் அவசியம்:
துல்லியமான விவசாயம் மற்றும் நவீன முறையிலான விவசாயம் ஆகியவை உற்பத்தி செலவு மற்றும் விவசாய கழிவுகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் அசோக் அனந்தராமன். இந்த அணுகுமுறை இன்றைய சூழலில் ரொம்ப முக்கியமானது எனவும், தரவுகளை சேகரிக்க சென்சார்கள், ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களைப் பயன்படுத்தி விவசாய நிலங்களின் விரிவான தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்ள இயலும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இறுதியாக, வேளாண் துறை சார்ந்து இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரனின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியதுடன், கிரிஷி ஜாக்ரன் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள MFOI 2024 விருது நிகழ்வு வெற்றியடையவும் தனது வாழ்த்துகளை தெரிவித்து உரையினை நிறைவு செய்தார் அசோக் அனந்தராமன்.
ACE (Action Construction Equipment Ltd.) இந்தியாவின் முன்னணி டிராக்டர் மற்றும் கட்டுமான உபகரண உற்பத்தி நிறுவனமாக திகழ்வதோடு மொபைல் கிரேன்கள் மற்றும் டவர் கிரேன்கள் பிரிவில் உலகளவிலான சந்தையில் முன்னணி நிறுவனமாகவும் திகழ்கிறது. கிரேன்கள் தவிர்த்து, ACE நிறுவனம் விவசாய சமூகத்திற்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் பிற விவசாய இயந்திர உபரகரணங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read more:
விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன?
நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்?