மக்கள் காடு வளர்ப்பு மையத்தின் (CPF) ஆதரவுடன், பழங்குடி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சமூகங்களுக்குள் மண்புழு உரம் அலகுகளை நிறுவி, அவற்றில் வெற்றியும் கண்டுள்ளன.
தெலங்கானா மாநிலத்தின் உட்னூர் மண்டலத்தின் நான்கு கிராமங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கான மண்புழு உரம் தயாரிப்பதன் மூலம் தங்கள் வருமானத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர். அலிகுடா, உமாபதிகுண்டா, ஜி.ஆர்.நகர், துக்காராம் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், கிராமத்திற்கு கொள்முதல் செய்ய வரும் இடைத்தரகர்களிடம் மாட்டு சாணத்தை விற்க வேண்டாம் என கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
மக்கள் காடு வளர்ப்பு மையத்தின் (CPF- Centre for People’s Forestry) ஆதரவுடன், இந்த பழங்குடி கிராமங்கள் தங்கள் சமூகங்களுக்குள் மண்புழு உரம் அலகுகளை நிறுவியுள்ளன. அவர்கள் மண்புழு உரம் தயாரித்து அதை சாகுபடிக்கு பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் சந்தையில் அதிகமாக விற்கவும் செய்கிறார்கள்.
CPF- ஒரு NGO, பழங்குடி விவசாயிகள் சேவை மையங்கள் (TFSC- Tribal Farmers Service Centers) எனப்படும் கிராம அளவிலான குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்தக் குழுக்கள் விவசாயிகளை களப் பார்வையிட்டு வழிகாட்டி, உழவர் களப் பள்ளிகள் (போலன் பாடி) எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. உட்னூர் மண்டலத்தில் மட்டும் ஓராண்டில் 58 யூனிட்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஜூன் 2022 முதல், மண்புழு உரம் மூலம் இயற்கை விவசாயம் செய்வது குறித்து கிராமங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு CPF விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கு சொந்தமான கால்நடைகள் அதிகளவில் உள்ளதால், கோடை காலத்தில் கிராமத்தின் ஒதுக்குப்புறங்களில் கொட்டப்படும் மாட்டு சாணம், ஒரு டிராக்டர் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை விற்பனையானது.
ஒரு சில பழங்குடி விவசாயிகளுக்கு இந்த அமைப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளித்த பிறகு, அவர்கள் கொஞ்சம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இவர்களின் வெற்றியைக் கண்டு, அதிகமான விவசாயிகள் மண்புழு உரம் மூலம் இயற்கை விவசாயம் பயிரிட்டனர்.
உட்னூர் மண்டலத்தில் CPF-58 யூனிட்களை நிறுவி, மண்புழு உரம் தயாரிப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்குள் மண்புழு உரம் தயாரிக்கும் அலகுகளை உருவாக்குகிறார்கள்.
உமாபதிகுண்டாவைச் சேர்ந்த பழங்குடியின விவசாயியான மேஷ்ராம் சின்னு பாட்டீல், மண்புழு உரம் தயாரித்து வெளிச்சந்தையில் விற்பதாகப் பகிர்ந்துகொண்டார். CPF அமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் தயாரிப்பில் பயிற்சி அளிக்கிறது, அதே நேரத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (FPO) சந்தைப்படுத்தல் முயற்சிகளை ஆதரிக்கிறது. மண்புழு உரம் தயாரிப்பு செயல்முறை சுமார் 30 முதல் 45 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: allthat grows.in
மேலும் காண்க:
இந்த மாவட்டங்களில் இன்று கனமழை- புயல் உருவாகும் தேதி கணிப்பு