News

Sunday, 26 September 2021 12:40 PM , by: Elavarse Sivakumar

Credit : Times of India

மாநிலம் முழுவதும் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில முக்கிய உத்தரவுகளைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து (Cancel exams)

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு, முந்தைய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடப்பட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஆலோசனை (Advice)

எனினும் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

முக்கிய அறிவிப்பு (Important Announcement)

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களிடம் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பாக பள்ளிகல்வித்துறை முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  • அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்.

  • இந்த குழுவில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பெண் காவல்துறை அலுவலர், பெண் மனநல மருத்துவர் ஆகியோர் இடம்பெற வேண்டும்.

  • அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும்.

  • மேற்கண்ட குழுவில் இடம் பெற்று இருப்பவர்கள் வாரத்தில் ஒருநாள் பள்ளிகளுக்கு சென்று இந்த புகார் பெட்டியை ஆய்வு செய்ய வேண்டும்.

  • இதில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் இருந்தால், அதை காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

  • அனைத்து பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் மகளிர் காவல் நிலையத்தின் தொடர்பு எண்கள் இடம்பெற வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்!

தமிழகம்: முழு வீச்சில் டெங்கு பாதிப்பு! அரசு நடவடிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)