மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 October, 2021 9:32 AM IST
Credit : The News Minute

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்பார்க்ட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. 

உயரிய விருது (Prestigious  Award)

தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது பல ஆண்டுகால திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, 'தாதா சாஹேப் பால்கே' விருதை அறிவித்தது.

டெல்லி பயணம்

கடந்த 25ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விருதை வழங்கி கவுரவித்தார். அதன்பின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை ரஜினி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திடீர் உடல்நலக்குறைவு (Sudden illness)

டெல்லிப் பயணத்தை முடித்து, சென்னை திரும்பினார். இந்நிலையில், ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'

மனைவி தகவல்

முழு உடல் பரிசோதனைக்காக, ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரத்தக்குழாயில் அடைப்பு

அதே நேரம், ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபட்டதாகவும், ஏற்கனவே மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல் திறன் திடீரென குறைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 

இன்பார்க்ட் பாதிப்பு

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும். 

ரத்த குழாயில் அடைப்பு, அது கிழிந்து போதல், ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு ஏதுவும் ஏற்படாது என டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
 

அண்ணாத்த

ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க...

ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது- 25ம் தேதி வழங்கப்படுகிறது!

மூட்டுவலியில் இருந்து விடுபடவேண்டுமா? இந்த பயிற்சி நிச்சயம் உதவும்!

 

English Summary: Actor Rajinikanth admitted to hospital
Published on: 29 October 2021, 07:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now