நட்ப்பாண்டு பயிர் காப்பீடு செலுத்த அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை, நான்கு தினங்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
பயிர் காப்பீடு (Crop Insurance)
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின், வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், கூறுகையில், வருவாய்த்துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போர், வீட்டு மனை பட்டா கோருவதால், அதை சட்டப்படி கையாளுவது குறித்து ஆலோசிக்கிறோம். இந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்துவதற்கான அவகாசம் வரும், ஜூலை மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், விவசாயிகளுக்கு, அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை, நான்கு தினங்களில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊராட்சி மற்றும் வருவாய்த் துறை இணைந்து, தமிழகத்தில் முதல்கட்டமாக, 876 பஞ்சாயத்துகளில் நிர்வாக அலுவலகங்கள், கூட்ட அரங்கம், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் இணைந்த 'கிராம செயலகம்' கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து, கட்டடம் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு!
உயர்ந்து வரும் அரிசி விலை: ஜிஎஸ்டி வரியால் மேலும் உயர வாய்ப்பு!