அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த போதிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. இது, தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நினைக்கும் பெற்றோர்களுக்கு நற்செய்தியாகும்.
மாணவர் சேர்க்கை (Admission)
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளிக் கல்வி துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு தரப்பு மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கையை, அடுத்த மாதம் வரை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. செப்டம்பரில் காலாண்டு தேர்வு துவங்குவதற்கு முன்பு வரை, மாணவர்களை சேர்த்து கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிக் கல்வி துறையின் இந்த அறிவிப்பால், பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கும் பல மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவர் சேர்க்கையை நீட்டிமப்பதன் மூலமாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் முதல் புதிய பென்ஷன் திட்டம்!
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!