வரும் ஜூலை 31-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ச்கை தொடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு நீடித்து நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன
கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முடிந்துள்ள நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.இது தொடர்பாக பதிலளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 12 வகுப்பு மாணவர்கள் சேர்க்கை ஜூலை 31-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களின் தேர்வு முடிவுகள் எப்படி வழங்க வேண்டும் என்ற மதிப்பீட்டு அளவுகோல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகள் கல்லூரி சேர்க்கை குறித்து முதல்வர் ஸ்டாலின்னை சந்தித்து ஆலோசனை செய்தனர்.சிபிஎஸ்இ மற்றும் மாநில வாரியம் 12 வகுப்பு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு இறுதி செய்யும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் சேர்க்கை ஜூலை 31 க்குப் பிறகு தொடங்கும்.
மேலும் அரசு அறிவித்த மதிப்பீட்டு முறையின்படி, பத்தாம் வகுப்பு மாணவாகளின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த வாரம் தொடங்கியது.இதில் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணில் 50%, 11 வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணில் 20% மற்றும் 12ம் வகுப்பின் செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் இருந்து 20% ஆகியவற்றை கொண்டு 12ம் வகுப்பிற்கு மதிப்பெண்கள்.
மேலும் படிக்க
சிபிஎஸ்இ வகுப்பு 12 வாரிய தேர்வு 2021 முடிவுகள்,தேர்வு மதிப்பெண்கள் கணக்கீடு