பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. மத்திய உணவு மற்றும் பொது நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலப்படம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் ரேஷன் பல்வேறு அதிகாரிகளின் மோசடிகளால் கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் பொருட்களின் தரம் சிறப்பாகவே உள்ளது. ஆனால் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆய்வு செய்தபோது, கடைக்காரர்களால் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
மத்திய அரசிடமிருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, அதிகபட்சமாக 26934 ரேஷன் மாதிரிகள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து எடுக்கப்பட்டன. இதில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்துள்ளன. அது சம்பந்தமான 118 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாக அம்மாநில அரசு அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 19,858 மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அதில், 1033 மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்தன. தமிழ்நாட்டைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 16022 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் 800 மாதிரிகள் தோல்வியடைந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 15355 மாதிரிகளும் மகாராஷ்டிராவில் 13118 மாதிரிகளும் எடுக்கப்பட்டன. இதுபோல, பல்வேறு மாநிலங்களில் ரேஷன் பொருட்களில் கலப்படம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் இருந்து பெறப்படும் ரேஷன், மாநில அரசால் விநியோகிக்கப்படுகிறது. மக்களுக்கு நல்ல ரேஷன் கிடைப்பதற்காக மாநில அரசு அவ்வப்போது மாதிரிகளை எடுத்து வருகிறது. இந்த மாதிரிகளின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த மோசடிகளைத் தடுக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மேலும் படிக்க
மூத்த குடிமக்களுக்கு டபுள் ஜாக்பாட்: வட்டி உயர்வு உட்பட விதிமுறைகளில் மாற்றம்!
தமிழ்நாடு முழுவதும் அதிவேக இணைய சேவை: அரசின் அருமையான திட்டம்!