குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு குறைவான விலையில் வீடுகளை வழங்குவதை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை சட்டபூர்வமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஏதுவான விலையில் வீடுகளை பெறுவதற்கு உதவும் வகையில் தமிழக அரசின் சாா்பில் மத்திய அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. இந்த இரு ஒப்பந்தங்களும் டெல்லியில் கையெழுத்தானது.
வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடி
இதன் அடிப்படையில், தமிழ்நாடு வீட்டுவசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடி கடனாக கொடுக்கிறது உலக வங்கி.
இதன் மூலம், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த விலையில் அதிக வீடுகளை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கத்திற்கு உதவியாக அமையும். மேலும், குறைந்த வருவாயுள்ள குடும்பங்களுக்கான மலிவு வீடுகளை வழங்குவதில் தற்போது நிலவும் ஒழுங்குமுறை ரீதியான தடைகளை அகற்றி, இத்துறையில் தனியார் பங்கேற்பினை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் வீட்டு வசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு, உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ள கடனுதவி என இரு திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் மாநிலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ஏழைகள் பெருமளவிற்கு சிறப்பான வீட்டு வசதியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, உலக வங்கியின் சார்பில் நாட்டு இயக்குநர் (இந்தியா)ஜுனைத் கமால் அகமத் ஆகியோர் இந்த கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில் திட்ட ஒப்பந்தங்களில் தமிழ்நாடு மாநில அரசின் முதன்மை இருப்பிட ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா மற்றும் உலக வங்கியின் சார்பில் ஜுனைத் கமால் அஹமத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.378.6 கோடி கடன்
மேலும், தமிழக வீட்டு வசதி வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ 378.6 கோடியை ரூபாய் நிதியையும் உலகவங்கி கடனாகக் கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில், தமிழக அரசின் பிரதிநிதியும், உலக வங்கியின் இந்திய பிரதிநிதியும் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டங்கள் குறித்து பேசிய தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் பணிக்குழுத் தலைவர் அபிஜித் சங்கர் ராய், இரு திட்டங்களுமே ஒன்றுக்கொன்று உதவி செய்வதாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் வீட்டு வசதித் துறையில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் முக்கிய நிறுவனங்களை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்டுள்ள இந்த கடனுதவி மூன்றரை ஆண்டுகள் நீட்டிப்புக்காலத்துடன் சேர்த்து மொத்தம் 20 ஆண்டுகளில் நிறைவைடையக்ககூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் – ரயில்வே அமைச்சகம் அழைப்பு!!
ஜன்தன் திட்ட தமிழக பெண் பயனாளிகளுக்கு ரூ.610 கோடி நிதி - நிர்மலா சீதாராமன்.
மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!