அரிசி ஏற்றுமதியில் உலகின் 3 வது மிகப்பெரிய நாடான வியட்நாம் சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்தியாவிடம் இருந்து அரிசியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்ட விலையேற்றமே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் அரசி தட்டுப்பாடு
அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் குறிப்பிட்ட சில நாடுகளில் வியட்நாம் 3வது இடத்தில் உள்ளது. வியட்நாமில் தற்போது அரிசி உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் இதன் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாமாளிக்க வியட்நாம் அரசு சுமார் 10 வருடங்களுக்குப் பின் இந்தியாவிடம் இருந்து அரிசி வாங்க முடிவு செய்துள்ளது
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அரசி உற்பத்தி பாதிக்கப்பட்டது, மேலும் தனது நடப்பு நாடுகளிலும் இதே நிலை நிலவியதால், இந்தியா- சீனா எல்லை பிரச்சனையையும் தாண்டி இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசி சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வியட்நாம் நாட்டிற்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால் இந்திய விவசாயிகளின் முக்கியத்துவம் உலகநாடுகள் மத்தியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
70,000 டன் அரிசி ஏற்றுமதி
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்திய வணிகர்களுக்கு சுமார் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்ய வியட்நாம் நாட்டிலிருந்து ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த 70,000 டன் அரிசியை ஒரு டன்னுக்குச் சராசரியாகச் சுமார் 310 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய உள்ளது. முதல் முறையாக வியட்நாம் நாட்டிற்கு அரிசியைப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய உள்ளோம் என அரிசி ஏற்றுமதி அமைப்பின் தலைவர் கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.
அரசி விலை குறைய வாய்ப்பு
வியட்நாம் நாட்டில் அரிசி உற்பத்தி குறைந்ததைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து அரசியை பெற்று வருகிறது. சுமார் ஒரு டன் அரசி விலை 500 முதல் 505 டாலர் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி விலை 381 முதல் 387 டாலராக இருக்கும் நிலையில் வியட்நாமில் அரிசி விலை குறைய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் படிக்க...
கடலோரப் பகுதிகள் மேம்பாடும், மீனவர்களின் நலனும் அரசின் முக்கிய முன்னுரிமை - பிரதமர் மோடி!!
பிப்ரவரி மாதத்தில் நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக ஆன்லைன் தேர்வு!
திசுவாழை வளர்ப்புத் திட்டம்- விவசாயிக்கு தலா 2,500 வாழைக் கன்றுகள் இலவசம்!