தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் மே 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் கோடை வெயில் உக்கிரம் காட்டத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்த வெயில் இன்னும் நீடிக்கும் என்பது போல நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் துவங்க உள்ளது. இந்த உச்ச பட்ச வெப்பக்காலம் 28ம் தேதி வரை நீடிப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கோடை வெப்பம் (Summer)
வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி மார்ச் முதல் மே வரை கோடை காலம். இதன்படி தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் அதிகபட்சமாக திருத்தணி மற்றும் வேலுாரில் 107 டிகிரி பாரன்ஹீட்டான 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. திருச்சி 41; மதுரை காஞ்சிபுரம் கரூர் பரமத்தி 40; சேலம் ஈரோடு மாதவரம் 39; சென்னை விமான நிலையம் தர்மபுரி தஞ்சாவூர் திருநெல்வேலி 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. மேற்கண்ட 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கவனமுடன் கோடை வெயிலை எதிர்கொண்டு சமாளிப்போம்
மேலும் படிக்க