வேளாண்மை அல்லது அதைச் சார்ந்த துறைகளில் வேலை தேடுகிறீர்களா? ஆம் எனில், உங்களுக்கான ஒரு வாய்ப்பு. இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். சி.எஸ்.கே ஹிமாச்சல பிரதேச வேளாண் பல்கலைக்கழகத்தில் கிளர்க், ஜூனியர் அலுவலக உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துப் பார்த்து தகுந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணி : ஜூனியர் அலுவலக உதவியாளர் (Jr Office Assit)
-
காலி பணியிடங்கள் ; 50
-
கல்வித் தகுதி ; அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஸ்டேட் போர்ட்டில் (10+2) பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். அல்லது, 10ம் வகுப்பைத் தொடர்ந்து ITI படித்திருக்க வேண்டும். அரசு பயிற்சி மையத்தில் டிப்ளோமா இன் கம்ப்யூட்டர் சையின்ஸ்/ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் / ஐடி படித்திருக்க வேண்டும்.
-
அதனுடன் டைப்பிங் தெரிந்திருக் வேண்டும். (ஆங்கிலம் நிமிடத்திற்கு 30வார்த்தைகள் அல்லது ஹிந்தி - நிமிடத்திற்கு 25 வார்த்தைகள்)
பணி : கிளார்க் (Clerk)
-
காலி பணியிடங்கள் : 4
-
கல்வித் தகுதி ; அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஸ்டேட் போர்ட்டில் (10+2) பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும்.
-
கண்டிப்பாக டைப்பிங் தெரிந்திருக் வேண்டும். (ஆங்கிலம் நிமிடத்திற்கு 30வார்த்தைகள் அல்லது ஹிந்தி - நிமிடத்திற்கு 25 வார்த்தைகள்)
-
சம்பளம் ; ரூ.10660 / மாதத்திற்கு
-
வயது வரம்பு ; 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்
-
விண்ணப்பக் கட்டணம் ; பொதுப் பிரிவினருக்கு ரூ.450/- ரிசர்வ் பிரிவினருக்கு ரூ.115/-
பணி ; கள உதவியாளர்
-
காலி பணியிடங்கள் ; 10
-
கல்வித் தகுதி ; அறிவியல் பாடத்துடன் கொண்ட இளங்களை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்
-
சம்பளம் ; ரூ.10785 / மாதத்திற்கு
-
வயது வரம்பு ; 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்
-
விண்ணப்பக் கட்டணம் ; பொதுப் பிரிவினருக்கு ரூ.450/- ரிசர்வ் பிரிவினருக்கு ரூ.115/-
பணி ; ஸ்டெனோ டைப்பிங் (Steno Typist)
-
காலி பணியிடங்கள் ; 5
-
கல்வித் தகுதி ; பள்ளிக் கல்வி (10+2) முடித்திருக்க வேண்டும்.
-
சம்பளம் ; ரூ.10910 / மாதத்திற்கு
-
வயது வரம்பு ; 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்
-
விண்ணப்பக் கட்டணம் ; பொதுப் பிரிவினருக்கு ரூ.450/- ரிசர்வ் பிரிவினருக்கு ரூ.115/-
விண்ணப்பிப்படது எப்படி?
தகுதியுடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்டிவத்துடன் தங்களுடைய சுயவிபரத்தையும் சேர்த்து கீழ்காணும் ஹிமாச்சல வேளாண் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஹிமாச்சல வேளாண் பல்கலைக்கழகம் (CSKHPKV)
Assistant Registrar (Recruitment), CSKHPKV,
Palampur, District. Kangra (Himachal Pradesh) - 176062.
அனைத்து பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் மட்டுமே. விண்ணபிக்க கடைசி தேதி வரும் 26ம் தேதி வரை.
மேலும் படிக்க...
இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகள் நல நிதி வாரியம் அமைப்பு!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்
தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை