வேளாண்துறையில் உயர்கல்வியைத் தொடர முடியாதவர்களுக்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
வேளாண்துறையில், ஆர்வம் உள்ள மாணவர்கள் சுயவேலைவாய்ப்பை பெருக்கிக்கொள்ளும் வகையிலும், உயர்கல்வியைத் தொடர முடியாதவர்களுக்காகவும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூர இயக்ககத்தின் சார்பில் 4 பட்டயப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
1.பண்ணைத் தொழில்நுட்பம் பட்டயப்படிப்பு (Diploma in Farm Technology)
-
வேளாண்மை சார்ந்த புதியத் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளலாம்.
-
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
-
பயிர் சாகுபடித் தொழில்நுட்பங்களை அறியலாம்.
2. தோட்டக்கலைத் தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு(Diploma in Horticultural Technologies)
-
தோட்டக்கலைப்பயிர் குறித்த புதிய தொழில்நுட்ப அறிவு பெறலாம்.
-
ஒட்டுக்கட்டுதல், பதியன்போடுதல் போன்ற பயிர்ப் பெருக்க முறைகளை அறிந்துகொள்ளலாம்.
-
மலைத்தோட்டப் பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள், வாசனைப்பயிர்கள், மலர்ச்செடிகள் மற்றும் மூலிகைச்செடிகள் குறித்த தொழில்நுட்ப அறிவு
-
தோட்டக்கலைப் பயிர்களில் அறுவடைக்குப் பிந்தையத் தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
3. பண்ணைக் கருவிகள் மற்றும் அதன் பராமரிப்பு பட்டயப்படிப்பு(Diploma in Farm Machinery and its Maintenance)
-
பண்ணைக் கருவிகள் தொடர்பான பொறியியல் அறிவினைப் பெறலாம்.
-
பண்ணைக் கருவிகளை வடிவமைப்பதற்கான வாய்ப்பு
-
பண்ணைக் கருவிகளைப் பழுது நீக்கிப் பராமரிக்கும் தொழில்நுட்பங்களை அறியலாம்.
4. வேளாண் கிடங்கில் தரக்கட்டுப்பாடு (Diploma in Quality control in Agri-warehousing)
-
வேளாண் கிடங்குகளில் தானியப் பாதுகாப்பு குறித்த தொழில்நுட்ப அறிவு பெறலாம்.
-
வேளாண் கிடங்கு மேலாண்மை குறித்த அறிவு பெறலாம்.
5.மூலிகை அறிவியல் (Diploma in Herbal Science)
-
மூலிகைப் பயிர்களின் வகைகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பெறலாம்.
-
மூலிகைப் பயிர்கள் ஏற்றுமதி குறித்த அறிவு பெறலாம்.
கல்வித்தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி
பயிற்சி காலம் - ஓராண்டு (இரண்டு பருவங்கள்)
பயிற்று மொழி - தமிழ் வழிக்கல்வி
வயது வரம்பு - 18 வயது பூர்த்தியானவர்கள். உச்சவரம்பு கிடையாது
நேர்முகப்பயிற்சி வகுப்புகள் - மாதத்திற்கு இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிறுகளில் நடத்தப்படும்.
பயிற்சி - ஒரு பருவத்திற்கு 5 மாதங்களில் 10 நேர்முகப் பயிற்சி வகுப்புகள்.
பயிற்சிக் கட்டணம் - 10,000 (பருவத்திற்கு)
மேலும் விபரங்களுக்கு
04226611229/9442111048/9489051046 என்ற எண்களிலும், odl@tnau.ac.in என்ற மின்னஞ்சல் மூலமும், www.tnau.ac.in என்ற வெப்சைட் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர். ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத் தவிர்க்க மானியம் - நாமக்கல் விவசாயிகளுக்கு அழைப்பு!
சாணத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க நீங்க ரெடியா? எளிய வழிமுறைகள்!