News

Tuesday, 23 February 2021 08:20 AM , by: Daisy Rose Mary

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பயிற்சி 5 நாட்கள் அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என வேளான் பல்கலை தெரிவித்துள்ளது.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்க்கும் வழங்கப்படுகிறது. வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

5 நாட்கள் பயிற்சி

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் மார்ச் 1 முதல் 5, 2021 தேதி வரை இப்பயிற்சி வழங்கப்படுதிறது.

 

கட்டண விவரம்..

பயிற்சிக் கட்டணமாக நபருக்கு ரூபாய் 10,000 + ரூ.1800 ஜிஎஸ்டி (18%) = ரூபாய் 1,800 வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளன. அதாவது 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பயிற்சிக்கு பதிவு செய்ய

உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள busieness@tnau.ac.in, eximabdtnau@ gmail.com, மற்றும் தொலைபேசி எண், 0422 – 6611310, 9500476626 உள்ளிட்டவற்றை தொடர்புக்கொள்ளலாம்.....

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் "ஊட்டி ஏலக்காய் டீ"-யை அறிமுகம் செய்யும் இண்ட்கோசர்வ்!

வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)