தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் சார்பில், பட்டதாரி மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான பயிற்சி நடத்தப்பட உள்ளது.
5 நாள் பயிற்சி (5 day training)
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம். இதில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
பயிற்சி கட்டணம் (Fees)
நபர் ஒன்றுக்கு ரூபாய் 10,000 + GST ரூ.1800 ஆக மொத்தம்11,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
20 நபர்கள் (20 Persons)
பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்) உள்ளன.
மேலும் முன்பதிவுக்கு
business@tnau.ac.in / eximabdtnau@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 0422-6611310 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை மையம் தகவல்!