விவசாயிகளுக்கு மானியத்தில் (Subsidy) வழங்கப்பட்ட உரத்தை பயன்படுத்தி, பசை தயாரித்த கம்பெனிக்கு வருவாய்த் துறையினர், 'சீல்' வைத்து, 42 டன் யூரியா (Urea) மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
உரத்தில் பிளைவுட் பசை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையம் அருகே, தனியார் கம்பெனியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானிய உரத்தை பயன்படுத்தி, பிளைவுட் பசை (Plywood glue) தயாரிப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. ஆய்வுநேற்று முன்தினம் இரவு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் வைத்திநாதன், ஆனைமலை தாசில்தார் வெங்கடாசலம், வேளாண் அலுவலர் ஸ்ரீமதி தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அங்கு பசை தயாரிக்க, மானிய உரம் (Subsidized compost) பயன்படுத்தப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, 45 கிலோ எடை கொண்ட, 927 மூட்டைகளில், 41.75 டன் யூரியா உரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டி பிக்ஸ் என்ற அந்த கம்பெனியை பூட்டி, சீல் வைத்தனர்.
உரக்கட்டுப்பாட்டு சட்டம்:
கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள உரக்கடைகளில், நேற்று வேளாண் துறையினர் (Department of Agriculture) ஆய்வு செய்தனர். கணபதிபாளையத்தில், குத்தகை அடிப்படையில், 'டி பிக்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கேரளாவை சேர்ந்த, ஆதில் முஸ்தபா. தப்பியோடிய இவர் மீது, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, உரக்கடைக்காரர்கள் உதவியுடன் யூரியா மூட்டைகளை, மானிய விலையில் வாங்கி வந்து, சட்ட விரோதமாக, பிளைவுட் பசை தயாரித்து, அதை கேரளாவில் விற்பனை செய்கிறார். முஸ்தபா மற்றும் அவருக்கு உதவிய உரக்கடைக்காரர்கள் மீது, வேளாண் துறை மற்றும் போலீசார் உதவியுடன், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தில் (Fertilizer Control Act), நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தாசில்தார் தெரிவித்தார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கொத்தமல்லிக்கு கட்டுபடியான விலையில்லை! அறுவடை செய்ய விவசாயிகள் தயக்கம்!
பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!