மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போய் பிரச்சாரங்களை செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பலன் மட்டுமே உண்டு என்றும் பயம் வேண்டாம் எனவும் மோடி பேசியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில், பாரத சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர் மன்னர் சுஹ்லதேவின் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி , வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
வரலாற்று தலைவர்களை மதிக்கும் பாஜக
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோடி, நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் கொள்ளை அடித்தவர்களுக்கு எதிராக தீரமாக போராடி வெற்றி அடைந்தவர் மன்னர் சுஹ்லதேவ். வரலாற்று புத்தகத்தில், அவருக்கு சரியான இடம் அளிக்கப்படவில்லை. ஆனால், மக்கள் மனதில் மன்னர் சுஹ்லதேவுக்கு நீங்காத இடம் உள்ளது. சுதந்திரத்துக்காக போராடிய சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜி உட்பட பல தலைவர்களுக்கு, மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், எந்த மரியாதையும் செய்யவில்லை. அந்த நிலையை, இப்போது, பா.ஜ.க.,மாற்றி வருகிறது.
வேளாண் சட்டங்களால் பயன் உண்டு
இதனிடையே விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து பேசிய அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பெரும் பலன் அளிக்கும் என்றார். இது, எதிர்க்கட்சியினருக்கும் தெரியும். ஆனாலும், இந்த சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானது என, பொய் பிரசாரமும் அரசியிலும் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளின் இந்த சூழ்ச்சியை விவசாயிகள் நம்பக்கூடாது எனவும் பிரதமர் மோடி பேசினார்.
மேலும் படிக்க..
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட13,000 விவசாயிகளுக்கு ரூ.16.48 கோடி வெள்ள நிவாரணம்!!
மாடி தோட்டம் அமைக்க மானிய விலையில் இடு பொருட்கள் - பயன்பெற அழைப்பு!!
மரவள்ளி சாகுபடியை அதிகரிக்க கீழ்காணும் ஆலோசனைகள் பின்பற்றுங்கள்! - வேளாண் பல்கலை தகவல்!