News

Sunday, 26 December 2021 12:17 PM , by: Elavarse Sivakumar

Credit : Vikatan

இந்தியாவில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படுவது தொடர்பாக வேளாண் துறை மந்திரியின் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் (Agricultural laws)

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தினர். டெல்லியில் முற்றுகையிட்ட அவர்கள், மாநில எல்லைகளை முடக்கித் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மோடி அறிவிப்பு (Modi`s announcement)

இதையடுத்து சர்ச்சைக்குரிய சட்டங்களைத்திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும் விவசாயிகளின் பிடிவாதம் காரணமாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும் இருப்பினும், சிலருக்கு இதைப் புரிய வைக்க முடியவில்லை என்பதால் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு (Indictment)

ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய சீர்திருத்தம் (Great reform)

இது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய அவர், விவசாயத் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு படிதான் பின்வாங்கியுள்ளோம். ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்” என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

அமைச்சர் மறுப்பு (Minister denied)

இது தொடர்பான வீடியோக்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், தன் பேச்சுக்கு அப்படி அர்த்தம் கொள்ளக்கூடாது என வேளாண் அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!

5 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)