விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பல பகுதிகளில் இருந்து விவசாயிகள், தாவர ஆராய்ச்சியாளர்கள் வருகை புரிந்தனர். விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதத்தில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாதத்திற்கு ஒரு முறை, விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறை தீர் கூட்டத்தில் பல பகுதிகளிலிருந்து விவசாயிகள், தாவர நோயியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள், வேளாண்மை துறை சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொள்வார்கள்.
அந்த சமயத்தில் விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்வார்கள். விவசாயக் குறைதீர் கூட்டம் நடைபெறும் போது ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை சம்பந்தப்பட்ட கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.
திண்டிவனத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் இயற்கை உரங்கள், இயற்கை திரவியங்கள், இயற்கை முறையில் வளர்ந்த மாஞ்செடிகள், கொய்யா செடிகள், உளுந்து விதைகள், நுண்ணூட்ட கலவைகள், உரங்கள் போன்ற பொருள்கள் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக அந்தந்த பருவத்திற்கு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கண்காட்சி திடல் அமைந்தது. குறிப்பாக விழுப்புரத்தில் பிரதான பயிராக சவுக்கு மரங்கள், நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இரண்டிலும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அதனை எப்படி தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க உரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: