News

Tuesday, 10 November 2020 11:31 AM , by: Daisy Rose Mary

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளி மீது டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து, அதன் பயன்களை கண்டரியும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரத்தை அடுத்துள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், மக்காச்சோளப் பயிரில் ஏற்படும் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் டிரோன் மூலம் (ஹெலிகேம்)பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து அதில் ஏற்படும் பயன்களைக் கண்டறியும் பணியில் வேளாண் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

''மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதல் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது, இதனை கட்டுப்படுத்துவதற்காகப் புதிய தொழில்நுட்பமான டிரோன் விமானம் மூலம் மருந்து தெளித்து ஆராய்ச்சி செய்துவருகிறோம். இதன்மூலம், பூச்சிக் கட்டுப்பாடு திறன், எஞ்சிய நஞ்சுத் தன்மை, புழுக்கள் இறப்பு விகிதம், நன்மை தரும் பூச்சிகள் எண்ணிக்கை போன்றவையின் சாதங்களைக் கண்டறியப் பார்க்கிறோம்'' என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில், பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் பிரபாகர் தலைமை தாங்கினார். வேளாண் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், பூச்சியியல் துறைத்தலைவர் சாத்தையா, தொலைவுணர்வு தொழில்நுட்பத்துறைத் தலைவர் பழநிவேலன், பூச்சியியல் துறை பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துரைசாமி, திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகன் உட்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க..

ஆத்தூர் கிச்சலி சம்பா நெல் சாகுபடி செய்வதற்கான எளிய வழிமுறைகள்!

வேளாண் விளைபொருட்களை மார்க்கெட் கமிட்டிகளில் விற்று பயன்பெறலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)