News

Friday, 18 March 2022 02:24 PM , by: R. Balakrishnan

Agriculture Budget

மார்ச் 24ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது. 2022 - 2023ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் இன்று (மார்ச் 18) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்தாண்டு வேளாண்துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் தாக்கல் (Budget filed) 

இன்று பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் மார்ச் 24ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை வேளாண் பட்ஜெட்டும், மார்ச் 21, 22, 23ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தொடர்பான பொது விவாதம் நடைபெறுகிறது.

மார்ச் 24ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலுரை ஆற்றுகிறார். வரும் நிதியாண்டில், மாநில மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61 %ல் இருந்து 3.80 சதவீதம் ஆக குறையும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றதும் தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கோவிட் பெருந்தொற்றின் 2 மற்றும் 3வது அலை கட்டுப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க

ஊழலுக்கு எதிராக உதவி எண் அறிமுகம்: பஞ்சாப் முதல்வர் அதிரடி!

தமிழக பட்ஜெட் 2022: முக்கிய அம்சங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)