நாட்டில் பயிர் விளைச்சல், இடர்பாடு காலங்களில் ஏற்படும் பயிர் சேதம் உள்ளிட்டவற்றை கணக்கிட ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் துறைக்கு விமான போக்குவரத்துதுறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், கிராம பஞ்சாயத்து அளவில் மட்டும் ட்ரோன்களை பயன்படுத்தலாம் எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
வெட்டுக்கிளிகளை அழிக்க உதவிய ட்ரோன்கள்
இந்திய வான்வெளிகளில் பொதுவாக ட்ரோன்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறுசிறு தேவைகளுக்கு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த காவல்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதிக் கடிதம் பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு லோக்கஸ்ட் வெட்டுக்கிளிகள் தாக்குதலின் போது வடமாநிங்களில் அந்த வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களின் உதவியுடன் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டது.
ட்ரோன்களை பயன்படுத்த வேளாண்துறைக்கு அனுமதி
இதைத்தொடர்ந்து, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நாட்டில் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான வேளாண் பகுதிகளில் பயிர் விளைச்சல் மற்றும் மகசூல் மதிப்பீட்டிற்காகவும், பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை கணக்கிடவும் ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லுப்படியாகும் என்றும், அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது :
-
வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
-
குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும்.
-
200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும்.
-
ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும் படிக்க..
வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் வனியோகம் - விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!