வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காவிரி டெல்டா (Cauvery Delta)
இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது. காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி வருகிறோம். விவசாயத்திறகு மிக முக்கிய பகுதியாக இருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளும் உள்ளது.
விவசாயத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு ஆலைக்கும் தி.மு.க., அரசு அனுமதி வழங்காது. விவசாயத்திற்கு தி.மு.க., அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.
மேலும் படிக்க
இயற்கை முறை தேயிலை சாகுபடி: சுற்றுலாப் பயணிகளின் ரசிக்கும் கொழுக்கு மலை!