News

Tuesday, 19 November 2019 11:24 AM

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான விற்பனையாளர்கள் இருப்புகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்ததை தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குநரால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுக்களால் மாநிலம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு சம்பா பருவத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20,000, எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரங்கள் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும்,  மாவட்ட முழுவதும் முறையாக விற்பனை செய்யப் பட்டு வருகிறதா என,  வேளாண்மை அலுவலர்களின் கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு குழுவானது,  விற்பனையாளர்கள் விற்பனை முனை இயந்திரத்தின் மூலம் விற்பனை செய்கிறார்களா, கை இருப்பு விவரங்கள் மற்றும் விலைப்பட்டியல்கள்  விவசாயிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் அறிவுப்பு பலகையில் குறிப்பிடப் பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

விவசாயிகள் உரங்கள் வாங்கச் செல்லும் போது அவர்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்து, உர மூட்டைகளில் அச்சடிக்கப்பட்டுள்ளதா, சில்லரை விற்பனை விலையினை சரி பார்த்து விட்டு வாங்கும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

Anitha Jegdeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)